ரஜினி மேடையில் சொன்ன குட்டி கதை! யார் காக்கா, யார் கழுகு?
நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரசிகர்கள் எல்லோரும் ரஜினி என்ன பேச போகிறார் என்று தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர் பீஸ்ட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்த பிறகும் நெல்சன் உடன் கூட்டணி சேர்ந்தது ஏன், ஜெயிலர் ஷூட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
அதன் பின் ஒரு குட்டி கதையையும் ரஜினி கூறி இருக்கிறார்.
குட்டி கதை..
பறவைகளில் காகம் எப்போதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும். ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை தராது. கழுகை கூட காகம் டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை வரும், ஆனால் அதனால் அதிக உயரம் பறக்க முடியாது.
நான் காக்கா கழுகுனு சொன்ன உடனே.. இவரை தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும்.
இவ்வாறு ரஜினி கூறி இருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.. ஜெயிலர் பட விழாவில் ரஜினி