நான்காவது முறையாக ரஜினியின் திரைப்படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம், வெளியான சூப்பர் தகவல்

rajini annaththa thalaivar 169
By Jeeva May 03, 2021 09:40 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் எப்போதும் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும்.

அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

மேலும் அண்ணாத்த திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் 169 படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் எந்திரன், பேட்ட, அண்ணாத்த உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனிடையே தலைவர் 169 படத்தை கார்த்திக் சுப்ராஜ் அல்லது தேசிங் பெரியசாமி இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US