தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்க்க முயற்சி செய்யும் ரஜினிகாந்த்.. நல்ல செய்தி வெளிவருமா
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இருவரும் விரைவில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
இதன்பின் தனது மகள் ஐஸ்வர்யாவிடம் பேசிய ரஜினி, 'உன் பிள்ளைகள் எதிர்காலத்தை விட, உன் விருப்பம் முக்கியமாகி விட்டதா' என கோபத்துடன் கேட்டுள்ளார்.
ரஜினியின் கடுமையான கண்டிப்புக்கும் அறிவுரைக்கும் பின், சில நிபந்தனைகளுடன் தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்துள்ளாராம் ஐஸ்வர்யா.
தொடர்ந்து தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரியாமல் தடுக்க, பேரன்கள் வாயிலாகவும் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறாராம் ரஜினி.
பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணமாக, மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்த, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சி வீண்போகாமல், விரைவில் இருவரிடம் இருந்தும் நல்ல செய்தி வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.