சினிமாவை விட்டு வெளியேறுவதற்கு முன் ரஜினி நடிக்கவிருக்கும் இரண்டு திரைப்படங்கள்..? அதுவும் யாருடன் இணைகிறார் தெரியுமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்பின், நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தரயா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், இப்படத்தை முடித்துவிட்டு தனது இரண்டாவது மகள் ஐஸ்வர்யாவின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்திலும் ரஜினி நடிப்பார் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு திரைப்படங்கள் தான் நடிகர் ரஜினியின் கடைசி படங்கள் என்றும், இந்த இரு படங்கள் முடிந்த பிறகு ரஜினி தனது ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் திரை வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri