ரஜினியின் படத்தை வெளியாகவிடாமல் தடுத்த சங்கம், தனி ஆளாக மாஸ் காட்டிய ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதும் உள்ளது.
மேலும் தனது உடல் பரிசோதனைகாக அண்மையில் ரஜினி சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த சினிமா பிரச்சனையில் நடிகர் ரஜினியின் படங்களை தடை செய்து எல்லோரின் பார்வையும் தங்களின் மீது திருப்பி கொள்ள விநியோகர் சங்கம் நினைத்து.
அவர்களின் எதிர்ப்பையும் மீறி தனி ஆளாக நடிகர் ரஜினிகாந்த் உழைப்பாளி படத்தை கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
அப்படத்திற்கு வந்த ரசிகர்கள் கூட்டத்தையும் வசூலையும் பார்த்த விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் சரணடைந்து அவரின் அடுத்த படத்தை வாங்க போட்டி போட்டனர்.
மேலும் மாபெரும் வெற்றி பெற்ற உழைப்பாளி படம் வெளியாகி நேற்றுடன் 28 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.