அண்ணாத்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, ட்ரெண்டிங் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. ஆம் அந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் ரஜினி விரைவில் மருத்துவ பரிசோதனைகாக அமெரிக்கா செல்லவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
#Annaatthe | ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்துவிட்டு, சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். #Rajinikanth @PTTVOnlineNews pic.twitter.com/eWidFkdT68
— Ponmanaselvan S (@IamSellvah) May 12, 2021

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
