ரஜினியா இப்படி செய்தது.. சர்ப்ரைஸ் ஆன நெல்சன் மற்றும் ஜெயிலர் டீம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது.
ஹீரோயினாக ஐஸ்வர்யா பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். விரைவில் ஹீரோயின் பற்றிய அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் முந்தைய படமான பீஸ்ட் நல்ல வரவேற்பை பெறாத நிலையிலும் ரஜினி தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் நெல்சனுக்கு திரைக்கதை எழுத உதவ இருப்பதாக வந்த தகவல்களும் உண்மை இல்லையாம்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. நெல்சன் மற்றும் டீம் டிஸ்கஷன் நடைபெறும் ஆபிசுக்கு சென்ற ரஜினி அவர்களுடன் ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்துகொண்டாராம். தனக்கு இருக்கும் கருத்துக்களையும் அவர் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ரஜினிகாந்த் இப்படி செய்திருப்பது சினிமா துறையில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.