ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது - அறிவுரையுடன் பொங்கல் வாழ்த்தை தெரிவித்த ரஜினி !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அவரின் சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுளளார்.
அதில் அவர் கூறியதாவது " ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே தான் வாழ்த்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிடிருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க.
ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) January 14, 2022