மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படம்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் நேற்று ரஜினி சிகிச்சைக்கு பின் சென்னை போஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டிற்கு திரும்பினார். அவர் வீடு திரும்பியுடன் ஹூட் ஆப்பில் இது குறித்து பேசி பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே தற்போது ரஜினி வீடு திரும்புவதற்கு முன் அவரின் மருத்துவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
