மகள்களுடன் பிரபல ஆன்மீக குருவை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.. வெளியான புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவா இயக்கியுள்ள இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிவோம்.
ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் தற்போது ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை, மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் இணைந்து சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
