இயக்குனரை நம்ப வைத்து ஏமாற்றிய ரஜினி..இதுக்கு பெயர் தான் சூப்பர் ஸ்டாரா
இளைஞர்கள் மத்தியில் பாப்புலர் இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் இயக்கி, நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு அனைத்து சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதனை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்த்
தற்போது ரஜினிகாந்த ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்தின் 171 படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.
மேலும், பிரதீப் லண்டன் சென்று லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனிடம் கதை கூறியுள்ளார் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 171 திரைப்படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்கவிருந்தது, ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால் இந்த கூட்டணி ட்ராப் ஆனதாக கூறப்படுகிறது.
