சிங்கப்பூர் ஜனாதிபதி விரும்பிய தேவா பாடல், வெளிவராத உண்மையை சொன்ன ரஜினிகாந்த்
தேவா கச்சேரியில் ரஜினி பேச்சு
தேனிசை தென்றல் தேவாவின் கச்சேரி அண்மையில் நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய ரஜினிகாந்த் ' சிங்கப்பூர் ஜனாதிபதி நாதன். அவர் மலேசியாவில் பிறந்து வளந்தவர், ஆனால் அவருடைய பூர்விகம் தமிழ்நாடு. சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்த அவர் கடந்த 2016ஆம் ஆண்டு மரணமடைகிறார்.
ஜனாதிபதியின் கடைசி ஆசை
அப்போது அவருடைய கடைசி ஆசையாக அவர் எழுதி வைத்திருந்தது என்ன தெரியுமா. தேவா இசையில் உருவான தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலை என்னுடைய உடலை அடக்கம் செய்வதற்கு முன் ஒலிக்கவேண்டும் என்பது தான் ஜனாதிபதி நாதனின் கடைசி ஆசையாக இருந்தது.
ஒரு பத்திரிகையில் கூட எழுதவில்லை
அவர் இறந்து பின் பல நாட்டு தலைவர்கள் முன்னிலையில் தேவாவின் பாடல் அன்று ஒலித்தது. அந்த நிகழ்வு சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து என பல நாடுகளில் பத்திரிகைகளில் வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகையில் கூட அதை பற்றி எழுதவில்லை.
தேவாவின் மனசு எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருக்கும். இனிமேல் ஆவது அப்படி நடக்க கூடாது ' என்று பேசினார் ரஜினிகாந்த்..
ஜனாதிபதி நாதனின் இறுதி சடங்கில் ஒலித்த தேவாவின் பாடல் வீடியோ..
இதுதான் அந்த நிகழ்வு #DevaConcert #DevaHits #Singapore #nathan https://t.co/t2eyV4EMji pic.twitter.com/mQc3busVXE
— ஐடி பொண்ணு ?? (@itponnu) November 21, 2022