பெண் ஒருவர் தர்மமாக ரூ.10 கொடுத்தார்.. ரஜினிகாந்த் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான கூலி படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பெண் ஒருவர் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஒரு முறை மாறுவேடத்தில் பெங்களூருவில் அமைந்திருக்கும் கோயிலுக்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு பெண் என்னை பார்த்ததும் யாசகம் பெறும் நபர் என்று நினைத்து விட்டார்.
உடனடியாக, அப்பெண் பத்து ரூபாயை என்னிடம் தர்மமாக கொடுத்தார். நானும் எதுவும் கூறாமல் அதனை பெற்றுக் கொண்டேன். சிறிது நேரம் கழித்து என்னிடம் இருந்த ரூ. 200-ஐ கோயில் உண்டியலில் போட்டேன்.
அதை கண்டு அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வந்தார். நான் காரில் ஏறிய பின்னர், எனது தலையை சுற்றி கட்டியிருந்த துணியை அகற்றி விட்டேன். அப்போது நான் யார் என்று அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்" என்று தெரிவித்துள்ளார்.