இரவின் நிழல் படத்தை பார்த்து கடிதம் எழுதிய ரஜினிகாந்த்! வீட்டுக்கு அழைத்து நேரில் பாராட்டு
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் இரவின் நிழல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினி கடிதம் எழுதி இருக்கிறார்.
"இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அடைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கு.. அவரது அனைத்து படக்குழுவினருக்கு, மரிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும்... முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..!"
இவ்வாறு ரஜினி பாராட்டி இருக்கிறார்.
மேலும் இன்று பார்த்திபனை நேரில் தன் வீட்டுக்கு அழைத்தும் பார்ட்டி இருக்கிறார். அங்கு செல்லும் முன் பார்த்திபன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
