ஜெயிலர் 2 படம் குறித்து யாரும் எதிர்ப்பார்க்காத அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்... ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இந்த வருடம் வெளியான திரைப்படம் கூலி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்த இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.
அப்டேட்
கூலி படத்தை முடித்த கையோடு ரஜினி ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் செம பிஸியாகிவிட்டார்.
நெல்சன் இயக்கும் 2ம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைபெற்றது. படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா, எஸ்.ஜே சூர்யா நடிக்க கமிட்டாகி இருக்கிறார்கள்.
அண்மையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் படம் குறித்து கேள்வி கேட்க அதற்கு அவர், அடுத்த வருடம் ஜுன் மாதம் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என யாரும் எதிர்ப்பார்க்காத அப்டேட் கொடுத்துள்ளார்.