முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேச்சை கேட்காமல் இருந்த ஒரே ஆள் இவர் தான்.. உண்மையை கூறிய நடிகர் ரஜினிகாந்த
நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும்பொழுது, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களையும், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எடுத்து பேசுவார்.
இன்னும் சில சமயங்களில் தனது திரையுலக நண்பர்களை குறித்தும் விழா மேடைகளில் பேசியிருக்கிறார்.
அந்த வகையில், ஒரு முறை தனது நண்பர் சோ ராமசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ' சோ அவரகள் சீரியல் ஒன்றை எடுத்து வந்தார். அது மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், தீடீரென அந்த சீரியலை சோ நிறுத்திவிட்டார். அப்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள், சோவிடம் ஏன் அந்த சீரியலை நிறுத்திவிட்டீர்கள், மீண்டும் துவங்களாமே என்று கேட்டுள்ளார். அதற்கு சோ, கொஞ்சம் வேலை இருக்கிறது, அதனால் தான் நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார் ". என ரஜினி பேசியிருந்தார்.
இந்த சம்பவத்தை வைத்து, சோ அவரைகளை கிண்டலடிக்கும் வகையில், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சொல்லியும், அவரது பேச்சை கேட்காமல் இருக்கும் ஒரே நபர், சோ தான். என்று ரஜினிகாந்த் நகைச்சுவையாக அந்த மேடையில் கூறியிருந்தார்.