அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - ராக்கெட்ரி திரைப்படம் குறித்து ரஜினி வெளிட்ட அறிக்கை..
ரஜினி வெளிட்ட அறிக்கை
நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ராக்கெட்ரி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நம்பி நாரயணன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படம் குறித்து புகழ்ந்து தள்ளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்டவர் பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன்.
அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடையே நன்றிகளும், பாராட்டுகளும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR
— Rajinikanth (@rajinikanth) July 4, 2022
பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தின் சூப்பர் ஃபஸ்ட் லுக்- இதோ
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri