வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை கூறிய ரஜினிகாந்த்.. எப்போது தெரியுமா
வேட்டையன்
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்புடன் இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
ரிலீஸ் தேதி
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பேசியுள்ளார். இதில் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது என கூறியுள்ளார். மேலும் கூலி திரைப்படம் குறித்தும் பேசிய ரஜினிகாந்த் அப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி துவங்குகிறது என தெரிவித்தார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
