5 ரூபாய் வாங்கிக்கொண்டு படத்தில் நடித்த ரஜினிகாந்த்.. ஏன், எதற்காக தெரியுமா
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கிவருகிறார்.
ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று பரட்டை. இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மாபெரும் பிரபலத்தை ரஜினிக்கு உண்டாக்கி கொடுத்தது.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்தவர் பாரதிராஜா. இவருடைய இயக்கத்தில் 16 வயதினிலே படத்திற்கு பின் ரஜினி நடித்த திரைப்படம் தான் கொடி பறக்குது. இப்படத்தை முதன் முதலில் இயக்குவதாக இருந்தது பாரதிராஜா கிடையாதாம்.
5 ரூபாய் சம்பளம்
வேறொரு இயக்குனர் தான் இயக்குவதாக இருந்தாராம். ஆனால், பாரதிராஜா இயக்கினால் மட்டும் தான் நடிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதால், இப்படத்தை பாரதிராஜா இயக்க ஒப்புக்கொண்டார்.
அப்போது ரஜினிகாந்திடம் 'நீ கேட்கும் ரூ. 30 லட்சம் சம்பளத்தை என்னால் கொடுக்க முடியுமா என தெரியவில்லை' என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
அதற்க்கு ரஜினிகாந்த், பாரதிராஜாவின் சட்டைப்பையில் இருந்து ரூ. 5 மட்டுமே எடுத்துக்கொண்ட, இதுவே போதும், மீதி பணத்தை படம் முடித்தவுடன் வாங்கிக்கொள்கிறேன் என ரஜினி கூறினாராம்.
படம் முடிந்தபின் ரூ. 30 லட்சத்துடன் ரஜினியிடம் சென்றுள்ளார் பாரதிராஜா. அப்போது ரூ. 20 லட்சம் மட்டுமே எடுத்துக்கொண்டு, ரூ. 10 லட்சத்தை பாரதிராஜாவிடம் திருப்பி கொடுத்துவிட்டாராம் ரஜினி. இந்த விஷயத்தை பாரதிராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா