கூலி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் இதுதான்.. அப்போ இண்டஸ்ட்ரி ஹிட் உறுதி
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் படமானது.
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயிலர் 2
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளாராம்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு முதல் பாகத்தில் இடம்பெற்ற மாஸ் வசனம் 'Hukum' என தலைப்பு வைத்துள்ளார்களாம். மேலும் ஜெயிலர் படத்தை போலவே இப்படமும் மபபெரும் அளவில் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
