மஞ்சம்மல் பாய்ஸ் படத்தில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜயமுத்து.. நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
மஞ்சம்மல் பாய்ஸ்
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மலையாளத்தில் இருந்து வெளிவந்த திரைப்படம் மஞ்சம்மல் பாய்ஸ். சிதம்பரம் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். மலையாள சினிமாவில் இருந்து வெளிவந்த இப்படத்தை கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
நடிகர் விஜயமுத்து
உலகளவில் இப்படம் ரூ. 200 கோடியை கடந்து புதிய வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் விஜயமுத்து. தமிழில் நடிகராக வலம் வந்த இவருக்கு மஞ்சம்மல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
நமது சினிஉலகம் சேனலில் கூட தனது திரை வாழ்க்கையை பற்றி மிகவும் மனம் உருகி, கண்கலங்கி பேசியிருப்பார் நடிகர் விஜயமுத்து. மஞ்சம்மல் பாய்ஸ் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த சமயத்தில், மஞ்சம்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பாராட்டு
இந்த நிலையில், இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் விஜயமுத்துவையும் நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள் :




Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
