ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் டாப் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவை பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.
அதை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
இந்நிலையில், இந்த வருடம் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவர் சினிமா வாழக்கையில் சிறந்த படங்களில் ஒன்றான அண்ணாமலை படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற ஒவ்வொரு பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri