லிங்கா பட கிளைமாக்ஸை மாற்றியது ரஜினி தான்! உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கூட்டணி சேர்ந்த படம் லிங்கா. அந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்தது, ஆனால் அதில் வந்த கிளைமாக்ஸ் காட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி படமும் பிளாப் ஆனது.
முதலில் வேறு ஒரு கிளைமாக்ஸை தான் ரவிக்குமார் எழுதி வைத்திருந்தாராம். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடிட் ஆன சீன்களை ரஜினி பார்த்து இருக்கிறார்.

அதன் பின் கிளைமாக்ஸை மாற்ற சொல்லி இருக்கிறார். பலூன் சீன் எல்லாம் முன்பு இல்லவே இல்லையாம், ஆனால் ரஜினி சொன்னபின் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அதை எடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தற்போது கூறி இருக்கிறார்.
இதனால் லிங்கா படுதோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணமா என நெட்டிசன்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.