விஜய்க்கு சின்ன வயதிலேயே அட்வைஸ் செய்தேன், காக்கா கழுகுக்கு ரஜினி முற்றுபுள்ளி
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக சென்னையில் நடந்தது.
இதில் பேசிய ரஜினிகாந்த், நீண்ட நாட்களாக இருந்த காக்கா-கழுகு சண்டைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
நான் சொன்ன கதையை விஜய்யை பொருத்தி எல்லோரும் பேசியது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. விஜய்யை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன், அவராக கஷ்டப்பட்டு இண்டு இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
அட்வைஸ்
மேலும் சிறு வயதில் அவுங்க அப்பா என்னிடம் அட்வைஸ் செய்ய சொல்ல, நல்ல படிப்பா பிறகு நடிகன் ஆகலாம் என்றேன்.
இப்போது விஜய் அரசியலில் வருவதாக கேள்வி பட்டேன், அதற்கும் என்னுடைய வாழ்த்துகள் என பேசி ரசிக சண்டைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.