விஜய்யின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது?... கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில்...
TVK விஜய்
தமிழ்நாடே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் 2026, கடந்த மே மாதம் நடந்தது.
என்ன அது, நடிகராக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருந்த விஜய் தமிழக முதலமைச்சராக பல போராட்டங்கள், பிரச்சனைகளை தாண்டி தேர்தலில் ஜெயித்து பொறுப்பேற்றார். அன்று முதல் தமிழக அரசியல் களம் வேறு மாதிரி முன்னேறி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடைசியாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பரந்தூர் Project கைவிடப்படும் என கூறியது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, ஆனால் விஜய்யின் இந்த முடிவை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தவரிடம் 100 நாள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்படி உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அவரோ தனது படப்பிடிப்பு விஷயங்களை மட்டும் கூறிவிட்டு விஜய் ஆட்சி பற்றி பதிலளிக்காமல் சென்றுள்ளார்.