மாரிமுத்து மரணத்தால் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த்.. உருக்கமான பதிவு
மாரிமுத்து
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்
ரஜினி இரங்கல்
ரஜினி வெளியிட்ட பதிவில் 'மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி' என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் மாரிமுத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) September 8, 2023
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.