வசூல் வேட்டையாடி வரும் கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கூலி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனாலும் கூட வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 17 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 509 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.