கூலி படத்தின் சென்சார் ரிசல்ட்.. ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் உடன் சூப்பர்ஸ்டார் இணைகிறார் என்பதால் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.
இது LCU படம் இல்லை என லோகேஷ் ஏற்கனவே அறிவித்துவிட்டார், இருப்பினும் அவரது மற்ற படங்களை போலவே இதிலும் டிரக்ஸ் கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
சென்சார் ரிசல்ட்
இந்நிலையில் தற்போது கூலி படத்தில் சென்சார் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு A சான்றிதழ் தரப்பட்டு இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
இதனால் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது உறுதி ஆகி இருக்கிறது.
ரஜினி படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்க காரணம், 36 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு அடல்ட்ஸ் ஒன்லி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது தான்.
கடைசியாக 1989ல் வந்த ரஜினியின் ’சிவா’ படத்திற்கு தான் A சான்றிதழ் கொடுத்திருந்தது சென்சார் போர்டு என்பது குறிப்பிடத்தக்கது.


காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
