ரஜினியின் கூலி படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா? ‘லேடி சூப்பர் ஸ்டார்' தான்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரச்சிதா ராம் யார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
யார் தெரியுமா?
இந்நிலையில், அவர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கன்னடத்தில் வெளியான ‘புல்புல்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரச்சிதா.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன், சுதீப் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
இதனால், கன்னடத்தில் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். அதை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது, கூலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
