செண்ட்டிமென்ட்டை தகர்த்த கூலி திரைப்படம்.. லோகேஷின் தரமான சம்பவம்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். மேலும் அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
தரமான சம்பவம்
இந்நிலையில், கூலி படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " இந்த மாதம் சிங்கிள் அல்லது புரமோ பாடல் ரிலீஸ் செய்யலாம். அனிருத், டி.ஆர். இருவரும் சேர்ந்து பாடி, டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.. இந்த பாடல் படத்தில் இடம்பெறுகிறதா? அல்லது புரமோ பாடலா என்பது குறித்து தெரியவில்லை.
இப்படத்தின் முதல்பாதி பார்த்து, லோகேஷை கட்டிப்பிடித்து ரஜினி பாராட்டிவிட்டார். OTT தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த படத்தை ஒரு பெரிய விலை தந்து வாங்கியிருக்கிறது. கூலி படம் சென்ட்டிமென்ட்டாக இருக்காது. லோகேஷ் கனகராஜ் தரமான சம்பவம் செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.