கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி வந்திருக்கு தெரியுமா
கூலி
லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இணைந்து படம் பண்ணுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கூலி திரைப்படம் அமைந்தது.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் அனைவரும் சர்ப்ரைஸ் தரும் வகையில் அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கூலி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கூலி திரைப்படம் எப்படி வந்துள்ளது, படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் விமர்சனம்
கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில், கூலி திரைப்படம் குறித்து பேசிய அவர், படத்தின் முதல் பாதி எமோஷ்னல் ட்ராமாவாக இருக்கும் என்றும், இடைவேளை காட்சியில் ரஜினியின் Trasformation நடக்கும் என்றும், அதன்பின் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கூலி திரைப்படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு, 'எனக்கு இன்னொரு தளபதி கொடுத்திருக்கீங்க லோகேஷ்' என மிகவும் மகிழ்ச்சியுடன் லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த முதல் விமர்சனம் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது.