ப்ரீ புக்கிங் தொடங்கிய வேகத்தில் கேரளாவில் ரஜினியின் கூலி செய்த கலெக்ஷன்... Record வசூல்
ரஜினியின் கூலி
தமிழ் சினிமா அடுத்து பார்க்கப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் கூலி படம் தான்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரிக்க இப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க பெரிய பான் இந்திய படமாக உருவாகி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள அவரது 6வது படம் தான் இது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடக்க வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியானது.

குடும்பத்தினரிடம் கிடைத்த ஈஸ்வரி Record செய்துவைத்த வீடியோ, குணசேகரன் சிக்குவாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
ப்ரீ புக்கிங்
கூலி படத்தின் ப்ரீ புக்கிங் பார்க்கும் போதே உலகம் முழுவதும் படத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது என நன்றாக தெரிகிறது.
மொத்தமாக ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலிக்க கேரளாவில் புக்கிங் தொடங்கிய வேகத்தில் ரூ. 2.5 கோடி மேல் கலெக்ஷன் செய்து ரெக்கார்ட் செய்துள்ளதாம்.