திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கூலி படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்
ரஜினியின் கூலி
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரித்துள்ள திரைப்படம் கூலி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், நித்யா ராம், ஸ்ருதிஹாசன், சார்லி, லொள்ளு சபா மாறன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகி இருந்தது.
அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது,
ஸ்பெஷல் பாடலில் பூஜா ஹெக்டே நடனம் ஆடியிருப்பார்.
ஓடிடி ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது, படத்திற்கு இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினியின் 50வது ஆண்டில் கூலி திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
தற்போது இப்படம் செப்டம்பர் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.