வெளிவந்தது ரஜினிகாந்தின் கூலி பட மாஸ் அப்டேட்.. ரிலீஸ் இந்த தேதியா?
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை அனிருத் இசையமைத்து வருகிறார். பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், படம் குறித்து ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, 70 % படம் ஏற்கனவே முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் முன்பு கூறிய நிலையில், தற்போது மீதி இருக்கும் படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான படப்பிடிப்பை நேற்று சென்னையில் தொடங்கியுள்ளனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் நடிகர் ரஜினிகாந்த அவரது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்ய உள்ளார். மேலும், இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri
