ரஜினியின் கூலி பட வசூலுக்கு வந்த பெரிய சிக்கல்.. என்னனு பாருங்க
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பெரிய அளவில் ரிலீஸ் ஆகும்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

வசூலுக்கு பாதிப்பு?
கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஜினி படம் என்பதால் போட்டிக்கு வேறு எந்த பெரிய படமும் வராது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதே தேதியில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடித்து இருக்கும் வார் 2 படம் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த படத்தால் தெலுங்கு மாநிலங்கள் மற்றும் ஹிந்தி பகுதிகளில் கூலி படத்திற்கு தியேட்டர் கிடைப்பதே பிரச்சனையாக இருக்கும் என தெரிகிறது. அதனால் கூலி படத்தின் வசூலுக்கு சிக்கல் வரும் என தெரிகிறது.
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri