ஒரே ஒரு படத்தின் மூலம் மாபெரும் சாதனை படைத்த ரஜினிகாந்த்.. விஜய், அஜித்தால் கூட முறியடிக்க முடியவில்லை
சந்திரமுகி
பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. நடிகை ஜோதிகா இப்படத்தில் ரஜினிகாந்திற்கு இணையான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
பாபா படத்தின் தோல்விக்கு பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி. வாசு இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

லைகா நிறுவனம் இப்படம் தயாரிக்கிறது. இந்நிலையில், 2005ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் சுமார் 800 நாட்கள் திரையரங்கங்களில் ஓடியுள்ளது. இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி இதன்பின் தற்போது வரை இந்த சாதனையை முன்னணி நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய், அஜித் படங்களால் கூட முறியடிக்கமுடியவில்லை என்பது தான் உண்மை..

"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu