மேடையில் நடனம் ஆடி அசத்திய நடிகர் ரஜினிகாந்த்.. அதுவும் எந்த நடிகையுடன் தெரியுமா
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன், சூப்பர் ஸ்டார் கைகோர்க்கவுள்ளார் என்று இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடனமாடி, மாஸ் வசனங்கள் பேசி பல முறை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் மேடையில் நடனம் ஆடி, மாஸ் வசனங்கள் பேசி இதுவரை பலரும் பார்த்ததில்லை.
இந்நிலையில், கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய விழா ஒன்றில், நடிகை குஷ்பூவுடன் இணைந்து மேடையில் நடனம் ஆடி இருக்கிறார் ரஜினிகாந்த்.
மேலும், பாட்ஷா கெட்டப் போட்டு, பல மாஸான வசனங்களை பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Thalaivar stage performance ?#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ
— J E B A _T A M I L A N ? (@samueltwitz) January 5, 2022