அச்சு அசல் சூப்பர்ஸ்டார் ரஜினி போல இருக்கும் பாகிஸ்தான் நபர்! வீடியோவுடன் இதோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவருக்கு ஹிந்தி நடிகர்களே கூட பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது தான்.
எழுபது வயதை கடந்த நிலையிலும் ரஜினி தற்போதும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். நெல்சன் உடன் ஜெயிலர் படத்தை முடித்த பிறகு அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார்.
ரஜினி போலவே இருக்கும் நபர்
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் போலவே அச்சு அசலாக இருக்கும் நபரின் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த Rehmat Gashkori என்ற நபர் தான் பார்க்க ரஜனிகாந்த் போலவே இருக்கிறார்.
அரசு பணியில் இருக்கும் அவர் தாசில்தாராகி பணியாற்றி வருகிறாராம். அவர் வேட்டைக்கு செல்லும் வீடியோக்களை facebookல் வெளியிட்டால், ரஜினிகாந்த் போலவே ஸ்டைலாக செய்வதாக கமெண்ட் செய்கிறார்களாம். ரஜினியை நேரில் சந்தித்து போட்டோ எடுக்கவேண்டும் என அவர் ஆசை தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் பாகிஸ்தானின் போலி மிஸ்டர் பீன் நபர் வைரல் ஆன நிலையில் தற்போது ரஜினியை போல இருக்கும் நபர் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.