ரசித்து ருசித்து உணவு உண்ணும் ரஜினிகாந்த்.. அதுவும் யாருடன் தெரியுமா, வெளிவந்த வீடியோ
ரஜினிகாந்த்
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் ஒரே ஒரு நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.
7 நாட்கள் இப்படத்திற்காக ரஜினிகாந்த் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இதற்காக அவருக்கு ரூ. 25 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.
உணவு உண்ணும் வீடியோ
ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் வீடியோ அல்லது புகைப்படங்கள் எதாவது ஒன்று தினம்தோறும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தனது மனைவி, அண்ணன் மற்றும் மகளுடன் பந்தியில் அமர்ந்து ரசித்து, ருசித்து ரஜினிகாந்த் உணவு உண்ணும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
தலைவர் சாப்பிடுவதை இப்போ தான் முதல் தடவை பார்க்கிறேன் ?? #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism pic.twitter.com/b57L8HdMaZ
— ?தீ? (@RajiniGuruRG) February 21, 2023
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா