ஒரே ஃபிரேமில் ரஜினிகாந்த் பகத் பாசில்.. வெளிவந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம்
வேட்டையன்
ஜெயிலர் எனும் மாபெரும் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.
கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் போன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குனர் TJ ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாள் அன்று கிலிம்ப்ஸ் வீடியோ கூட வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கிறார்.
மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
அவ்வப்போது வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே ஃபிரேமில் ரஜினிகாந்த் பகத் பாசில்
ஆனால் தற்போது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்று லீக்காகி இருக்கிறது. ஆம், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
அப்போது படப்பிடிப்பு ரஜினி மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..