எனக்கு மெசேஜ் சொல்ற கதை செட் ஆகாது.. வேட்டையன் விழாவில் ரஜினி Full Speech
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினி படம் பற்றி என்ன பேசி இருக்கிறார் என்பதன் முழு விவரம் இதோ.
ஜெயிலர் படத்திற்கு பிறகு பல இயக்குனர்கள் உடன் கதை கேட்டேன். அப்போது ஜெய் பீம் படத்தை படத்தை பார்த்தேன். படம் பிடித்து இருந்தது. வழக்கமாக பிடித்து போன் செய்து வாழ்த்து சொல்வேன். ஆனால் ஏனோ அவருக்கு கால் செய்யவில்லை.
அதன் பிறகு தான் ஞானவேலுக்கு இது இரண்டாவது படம், அவர் யாருக்கும் அசிஸ்டென்ட் ஆக எல்லாம் வேலை செய்யவில்லை, ஜர்னலிஸ்ட் ஆக இருந்து இயக்குனராக வந்திருக்கிறார் என தெரிந்துகொண்டேன். அதன் பிறகு அந்த கண்ணோட்டத்தில் படம் மீண்டும் பார்த்தேன்.
அப்போது என் மகள் சௌந்தர்யா எனக்கு போன் செய்து இயக்குனர் ஞானவேல் ஒரு லைன் கதை சொன்னார், பிடித்து இருந்தது, அதை கேளுங்க என கூறினார்.
"நீங்க மெசேஜ் சொல்லுவீங்க, அது எனக்கு செட் ஆகாது. எனக்கு கமர்ஷியலாக இருக்க வேண்டும்" என ஞானவேலிடம் கூறினேன். அவரும் 10 நாள் டைம் வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.
அதன் பின் சில நாட்களில் போன் செய்து 'நான் கமர்ஷியலாக எடுக்கிறேன். ஆனால் லோகேஷ், நெல்சன் மாதிரி இல்லாமல் வேறு விதத்தில் உங்களை காட்டுகிறேன்' என கூறினார். அது தான் எனக்கு வேண்டும் என சொல்லி ஓகே சொல்லிவிட்டேன்.
பல டெக்னீஷியன்கள் பெயர்களை கூறி, அவர்கள் எல்லாம் வேண்டும் என கூறினார். அதன் பின் 100% அனிருத் வேண்டும் என அவர் கூறினார். நான் 1000% அனிருத் தான் வேண்டும் என கூறினேன் . அனிருத் எனக்கு மகன் மாதிரி.
அக்டோபர் 10 ரிலீஸ் தேதி என்பதை முன்பே உறுதி செய்துவிட்டோம். ஆனால் லைகாவுக்கு இருந்த பிரச்சனையால் அதை அறிவிக்க முடியவில்லை.