ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போது நிறைவு பெறுகிறது! ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கூலி படத்தை முடித்த கையோடு தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளராகளை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்படி போய்க்கொண்டு இருக்கிறது? எப்போது நிறைவு பெரும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் "ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற டிசம்பர் மாதம் ஆகலாம்" என ரஜினி கூறியுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
