ரஜினிகாந்த்துக்கு முடிவெட்ட 1 லட்சம் ரூபாய் வாங்கும் நபர்.. யார் இந்த ஆலிம் ஹக்கீம்
இந்திய அளவில் பிரபலமான ஹேர் ட்ரெஸ்ஸர்களில் ஒருவர் ஆலிம் ஹக்கீம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ராம் சரண், மகேஷ் பாபு என சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி எம்எஸ் தோணி, விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் வரை பல நட்சத்திரங்களுக்கு அவர் தான் ஹேர் ட்ரெஸ்ஸர் ஆக இருந்திருக்கிறார்.
சிகை அலங்காரம் மட்டுமின்றி அவர் டாட்டூ ஸ்டூடியோவும் நடத்துகிறார்.
ரூ.1 லட்சம்
தற்போது ஆலிம் ஹக்கீம் ஒருமுறை முடிவெட்ட 1 லட்சம் ரூபாய் பிரபலங்களின் வாங்குகிறாராம். ஆனால் அவர் தனது கெரியரை தொடங்கும்போது 20 ரூபாயில் தான் தொடங்கி இருக்கிறார்.
படிப்படியாக முன்னேறி தற்போது 1 லட்சம் ரூபாய் வாங்கும் அளவுக்கு அவர் வளர்ந்து இருக்கிறார். ஆலிம் ஹக்கீம் பிரபலங்கள் உடன் இருக்கும் ஸ்டில்கள் இதோ.





