ரஜினிகாந்த் எந்த படத்திலிருந்து விக் வைக்க தொடங்கினார் தெரியுமா.. இந்த படமா?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் சில தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளியானது.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ரஜினிகாந்த் இளமைகாலத்தில் தனது நிஜமான ஹேர் ஸ்டைலுடன் தான் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு நல்ல முடி இருந்ததாம்.
ஆனால், அவருக்கு வயதான பின் தான் முடிக்கொட்டியது. அதிலிருந்து அவர் விக் வைத்துதான் நடித்து வருகிறார்.
இந்த படமா?
இந்நிலையில், அவர் எந்த படத்தில் இருந்து விக் வைத்து நடித்து வருகிறார் என்று தெரியுமா? படையப்பா தான். படையப்பா படத்தில் இருந்து தான் அவர் விக் வைக்க தொடங்கி உள்ளார். ரஜினிகாந்தின் விக் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.