பணக்கஷ்டம்! சொத்துக்களை விற்க நினைத்த கே. பாலசந்தர்.. ரஜினிகாந்த் செய்த வேலை
கே. பாலசந்தர்
ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே. பாலசந்தர்.
கமெர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல், வித்தியசமான கதைகளை வைத்து படம் இயக்கி வந்த கே. பாலசந்தருக்கு அவருடைய 80வது வயதில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

பணக்கஷ்டம் ஏற்பட்டு, தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு சென்றுள்ளார் கே. பாலசந்தர். இதை பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இப்படியொரு விஷயம் நடக்கிறது, உங்களுடைய குருநாதர் கஷ்டத்தில் இருக்கிறார் என ரஜினியிடம் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் செய்த உதவி
உடனடியாக ரஜினிகாந்த் தனது குருநாதருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன், கே. பாலசந்தரின் தயாரிப்பில் குசேலன் திரைப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இது கே. பாலசந்தருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாம்.

இப்படிப்பட்ட மனிதன், அவருக்கும் இருக்கும் குருபக்தி, இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலம் காலமாக நிலைத்து நிற்பார் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
You May Like This Video
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri