கர்நாடகா சென்ற சூப்பர் ஸ்டார், பொது மேடையில் ரஜினிக்கு நடந்த மாஸான விஷயம்- வைரலாகும் புகைப்படம்
நடிகர் புனித் ராஜ்குமார்
கன்னட சினிமாவில் இருந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். இவர் நடித்த பல படங்கள் செம ஹிட்டாகியுள்ளது, அடுத்தடுத்து படங்கள் நடித்து மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் இருக்க திடீரென கடந்த வருடம் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
எப்போதும் பிட்டாக இருக்கும் புனித் இறந்தது சினிமா ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அவர் இறந்த பிறகு ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் பல வீடியோக்களை வைரலாக்கி வந்தார்கள்.
அரசின் விருது
தற்போது அரசு சார்பில் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களுக்கு கர்நாடகா ரத்னா விருது கொடுக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் கர்நாடகா சென்றார்.
பின் விருது நிகழ்ச்சி ரஜினிகாந்த் செல்ல கர்நாடகா அமைச்சர் முனிரத்னா அவருக்கு குடை பிடித்து வந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் எங்கு சென்றாலும் ராஜ மரியாதை தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?