மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், காரில் இருந்து கையசைத்து விட்டு செல்லும் வீடியோ..
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டது ரசிகர்களை உற்சாக படுத்தியது.
ஆனால் சில நாட்கள் பிறகு அப்படத்தின் ஷூட்டிங்கில் உள்ள படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மேலும் அவருக்கு கொரோனா குறித்த எந்தஒரு அறிகுறியும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை நடிகர் ரஜினி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது.
அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினி மருத்துவமனையில் இருந்து காரில் வெளியே செல்லும் போது ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ...
Welcome back, Thalaivaa! Nobody but your fans can understand the pain we have been going through for the last 3 days. We love you so much! ♥️?#MillionHeartsForTHALAIVAR #Annaatthe @rajinikanth pic.twitter.com/yQrqql3Y0y
— Rajinikanth Fans (@RajiniFC) December 27, 2020