இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி தானா.. எவ்வளவு தெரியுமா
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.
ரஜினி சம்பளம்
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தலைவர் 172 குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், இப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 300 கோடி சம்பளம் வாங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உயர்ந்துள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.