சுயசரிதை எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. அதில் இதெல்லாம் இருக்கும்! - மகள் சௌந்தர்யா கூறிய தகவல்
நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் டாப் நடிகர்களில் ஒருவர். தமிழில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினி 75 வயதிலும் பிஸியான நடிகராக இருந்து வருகிறார். மற்ற முன்னணி நடிகர்களுக்கு தற்போதும் பாக்ஸ் ஆபிசில் போட்டியாக இருந்து வருகிறார் அவர்.

சுயசரிதை
இந்நிலையில் ரஜினி தனது சுயசரிதை புத்தகத்தை எழுத தொடங்கி இருப்பதாக அவரது மகள் சௌந்தர்யா தெரிவித்து இருக்கிறார்.
இளம் வயதில் பட்ட கஷ்டங்கள், பெங்களூரில் கண்டக்டர் ஆக பணியாற்றியது தொடங்கி சென்னைக்கு வந்து எப்படி பெரிய நடிகர் ஆனார் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும் என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயங்களும், ரஜினி ஒவ்வொரு ரோலுக்கும் எப்படி எல்லாம் பணியாற்றினார் என்பது உள்ளிட்ட அனைத்தும் அவர் எழுதி வருகிறார் என சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.