பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழகத்தில் 14 நாளில் செய்த வசூல் சாதனை..
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 திரும்பிய இடமெல்லாம் வசூல் சாதனை தான்.
தமிழகத்தில் சுமார் 1000 ஸ்கிரீனில் இப்படம் வெளிவர, இன்று வரை எந்த திரையரங்கிலும் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு இப்படம் இந்த வாரமும் அத்தனை திரையரங்குகளிலும் அப்படியே ஓடும் என்றே கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் ஜெயிலர் 2 தமிழகத்தில் மட்டும் வெளிவந்த 14 நாட்களில் ரூ 188 கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இப்படியே சென்றால் கண்டிப்பாக இந்த வார இறுதியில் தமிழகத்தில் ரூ 200 கோடி வசூலை ஜெயிலர் 2 தொடும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இதுவரை யாரும் தொடாத ரூ 250 கோடி வசூலை ஜெயிலர் 2 தமிழகத்தில் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது உள்ள கணிப்பில் படி இப்படம் தமிழகத்தில் ரூ 225+ கோடிகள் வசூல் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.